ஆலயம் அமர்ந்த ஆனந்தா - எனக்கு
ஆன்மலயம் அருள்வாய் ஞானானந்தா - ஆலயம்
நிலையில்லா நிலைதனைக் கடந்திடவே - உந்தன்
பதலயம் தந்தே அருள்வாயே- ஆலயம்
எல்லை இல்லா இன்ப வெளியினிலே- உந்தன்
ு இணையில்லா அன்பு மொழியினிலே
கருணை கொண்டே என்னை காத்திடவே- நீ
அருணையின் அருகே அமர்ந்தாயே - ஆலயம்
கருவுடல் எய்தி நான் அல்லலுற்றேன் இந்த
இருள் சூழ்ந்த மாயையின் வலையினிலே
மருள் நீக்கி திருவருள் புரிவாயே
உனதருள் வேண்டியே வணங்கி நின்றேன் - ஆலயம்
தஞ்சம் என்றே உன்னை வந்தடைந்தேன்- உந்தன்
கஞ்ச மலர் தாளினையே சரணடைந்தேன்
நெஞ்சுருகி உன்னை தினம் துதித்தேன்
குஞ்சிதனே விரைவில் வருவாயே - ஆலயம்
ஆலடியில் அமர்ந்த வல்லோனே
நீயே காலடியில் அன்று வந்தவனே
நாலடி தத்துவத்தை நவின்றவனே- நீயே
அகண்டமாய் நின்ற சிவரத்தினனே - ஆலயம்
குறையொன்றும் இல்லாத கோவிந்தனே
மறைகள் எல்லாம் போற்றும் மெய்யோனே
உறைந்திடுவாய் என்னுள் நிறைந்திடுவாய்
நிரஞ்சனானந்தனில் கலந்திடுவாய் தேவா- ஆலயம்
Aalayam Amarntha Aanantha - Enakku
Aanmalayam Arulvaai Gnananantha - Aalayam
Nilaiyilla Nilaithanai Kadanthidave- Unthan
Pathalayam Thanthe Arulvaaye
Yellai Illa Anbu Veliyinile
Anbu Inaiyilla Anbu Mozhiyinile
Karunai Konde Ennai Kaathidave
Arunaiyin Aruge Amarnthaye - Aalayam
Karuvudal Yethi Naan Allalutren Intha
Irul Suzhntha Mayaiyin Valaiyinile
Marul Neeki Thiruvarul Purivaye
Unatharul Vendiye Vanangi Ninren - Aalayam
Tanjam Endre Unnai Vanthadainthen
Kanja Malar Talinai Saranadainthen
Nenjamurugi Unnai Dinam Thudithen
Kunjithane Viravil Varuvaay
Aaladiyil Amarntha Valloane
Pin Kaladyil Andru Vanthavane
Naaladi Tatuvattai Navindravane
Agandamai Nindra Sivarathiname - Aalayam
Kuraiyondrum Illatha Govindane
Maraigal Ellam Potrum Muthalvone
Urianthiduvai Ennul Nirainthiduvaai
Niranjananandanil Kalanthiduvai – Aalayam